ஜோ பைடனின் கொரோனா குழுவில் தமிழ் பூர்வீகத்தை கொண்ட பேராசிரியர் செலின் – ஸ்டாலின் வாழ்த்து





கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவர் குழுவில் தமிழ் பூர்வீகத்தை கொண்ட மருத்துவர் செலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடன் நேற்று நியமித்துள்ள இந்த குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் செலின் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் மெடக்குறிச்சியை பிறப்பிடமாக கொண்டவர் செலின்.
நியுயோர்க் பல்கலைகழகத்தின் மருத்துவகல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியாற்றிவரும் இவர் அமெரிக்காவின் காசநோய் தடுப்புபிரிவிலும் பணியாற்றுகின்றார்.
தமிழ்பூர்வீகத்தை கொண்ட செலின் நியமிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் முகா ஸடாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் “அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்புக்கு அமைத்துள்ள தேசியப் பெருந்தொற்றுத் தடுப்பு குழுவில் செலின் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்ப் பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தகைய முக்கியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன். அவரது பணி சிறக்க வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.



இதேவேளை ஜோ பைடன் தனது கொரோனா வைரஸ் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வைத்தியர் விவேக் மூர்த்தியை நியமித்துள்ளார் என்பதுடன் அந்த குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வைத்தியர் அத்துல் கவன்டேயும் இடம்பெற்றுள்ளார்


கருத்துரையிடுக

0 கருத்துகள்