‘பசிலுக்காக ஆசனத்தை விட்டுக்கொடுப்பேன்’ - ஜயந்த கெடேகொட அதிரடி


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தில் அங்கம் வசிக்கவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டையும் அரசாங்கத்தையும் முன்னோக்கி நகர்த்தும் திறன், பசில் ராஜபக்ஷவுக்கு உண்டு என்றும் எனவே, அவர் நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு, தனது இடத்தை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இது எப்போது எவ்வாறு நடக்கும் என்பது பற்றி இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்