‘ருவான் விஜேவர்த்தனவே ஐ.தே.கவின் அடுத்தத் தலைவர்’


ஐ.தே.கவின் உபதலைவராக இருக்கும் ருவான் விஜேவர்த்தனவே என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று தான் உறுதியாக நம்புவதாக, ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (21), ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்னர், ருவான் விஜேவர்தனவே கட்சித் தலைவராக வருவார் என்பதில், எந்தவொரு வாதமும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்