அநுராதபுரம் நகரில் யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வார்ட் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யாசகருக்கு செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து, அவரை அனுமதித்த 17ஆம் இலக்க வார்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த யாசகர் கடந்த 20 நாள்களாக அநுராதபுரம் நகரைச் சுற்றி திரிந்துள்ளாரென்றும் எனவே, நகரிலுள்ளவர்கள் 14 நாள்கள் சுயதனிமையிலிருக்குமாறும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்