மேல் மாகாண ஊரடங்கை தளர்த்த முடிவு.



கடந்த 10 நாட்களாக மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டி, ஆட்டுப்பட்டித்தெரு, பொரளை, புளுமெண்டல், கரையோரபொலிஸ், மாளிகாவத்தை, தெமட்டகொட, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும். மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன , மோதரையின் ரண்முத்து செவன ,கிராண்ட்பாஸின் முவதொர உயன, தெமட்டகடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளியே செல்லவோ எவரும் உள்ளே வரவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை , கடவத்த, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா எல, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும். களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும், வேக்கட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்