கொவிட் 19 தொற்று காரணமாக மேலும் சில பகுதிகள் இன்று(17) காலை 6.00 மணிமுதல் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் மொனராகலை மாவட்டத்தின் கிராம அலுவலர் பிரிவொன்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும், அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும், ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மொனராகலை மாவட்டத்தின் அலுபொத கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்