சாய்ந்தமருதில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்! 2வயது குழந்தைக்கு கொரோனா?

 

ஒரு குடும்பத்திலுள்ள 12 பேருக்குச் செய்யப்பட்ட PCR பரிசோதனையில் 2 வயதுக் குழந்தைக்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதனை தெரியப்படுத்தும் போது அந்த கணத்தில்  ஏற்பட்ட மரண ஓலத்தையும் அழுகுரலையும் நேற்று அனுபவித்த போது என்னை அறியாமல் எனது கண்களிலும் கண்ணீராகிவிட்டது, இப்பிள்ளைக்கான தொற்று அன்புள்ளம் கொண்ட பிள்ளையின் பெரியப்பாவிடம் இருந்து கிடைத்துள்ளது. இதனால் தொற்றுக்குள்ளாகாத தாயுடன் பிள்ளை சிகிச்சை நிலையத்திற்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டது. 


அன்பர்களே, தயவு செய்து உங்கள் பிள்ளைகளின் கொரோனா பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். நீங்களும் பாதுகாப்பாக நடந்து கொள்ளுங்கள்.


இவ்வாறு தனது முகநூலில் சாய்ந்தமருது பைலான் நளீம் PHI அவர்கள் பதிவிட்டுள்ளார்.


எனவே நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கே கொரோனா தொற்று அதிகம் ஏற்படுகிறது. 


நமது பிராந்தியத்தில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதால் உங்கள் வீட்டு குழந்தைகள் விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்படுங்கள். 


சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொரோனா வரும் முன் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்