முக்கிய 4 உலமாக்களுக்கு தடை - அதிரடியாக முஸ்லிம் சேவையின் 2 அதிகாரிகளுக்கும் இடமாற்றம் உண்மை நிலை என்ன?



இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 4 முக்கிய உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என SLBC முஸ்லிம் சேவைக்கு நெருங்கிய வட்டாரங்கள் சிலோன் முஸ்லிமிடம் உறுதிப்படுத்தியது.


✓ Mufti Yusuf,

✓ Mlv. Abdul Khaliq, 

✓ Mlv Murshid Mulaffer

✓ Shk.Faleel,


இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் பல்வேறு மார்க்க தெளிவு, ஐக்கியம்,  சமாதானம், சகவாழ்வு  உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடந்த காலங்களில் உரையாற்றி வந்தவர்கள் என்பதுடன் கடந்த காலங்களில் இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் ஜமாஅத் அடிப்படையில் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிலையிலேயே அவர்களுக்கு தற்போது இத்தடை விதிக்கப்பட்டள்ளது. இனிமேல் வரும் காலங்களில் இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சிகளை நடந்த முடியாது.


இவர்களின் பழைய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படாது என அறிய வருகிறது.


அத்துடன முஸ்லிம் சேவையில் பணியாற்றிய 2 முக்கிய அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்