உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம்வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கேள்வியை எழுப்பியுள்ள விஜயதாச ராஜபக்ச இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நலன்களிற்காக வழங்கப்பட்ட நிதி என்பதால், அதற்கு என்ன நடந்தது என அறிவது கட்டாயமான விடயம் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2019 ஜூலை மாதம் இடம்பெற்ற தேசிய சமாதான மாநாட்டில் முஸ்லீம்வேர்ல்ட் லீக்கும் கலந்துகொண்டது என தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ச அந்த அமைப்பின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கினார் என ஊடகங்கள் தெரிவித்திருந்ததை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததையும் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
Posted in:
Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Newer Post Older Post Home
2 கருத்துரைகள்:
