(எஸ்என்.ஹஸ்மி)
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாகக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் நேற்று காலை கையளிக்கப்பட்டது.
மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அறிக்கையை என்னிடம் கையளித்தார்.
மூன்று பேர் கொண்ட மேற்படி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2020 ஜனவரி 9 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு, FCID, CID மற்றும் காவற்துறை விசேட புலனாய்வு பிரிவு ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் காரணமாக,
2015 ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 வரை,
அரசியல் பழிவாங்கலினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து விசாரணை செய்யும் பொறுப்பு மேற்படி ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், சலுகைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆணைக்குழு விரிவாக விசாரணை நடத்தியுள்ளது.
செய்தி ஊடகங்களின் விளம்பரத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற 1971 முறைப்பாடுகள் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டன.
மேற்படி விசாரணை அறிக்கை 03 தொகுதிகள் மற்றும் 2043 பக்கங்களைக் கொண்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான - ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக, ஓய்வு பெற்ற காவற்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் வீரசிங்க மற்றும் எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, மற்றும் எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதன் போது நேற்று பிரசன்னமாகியிருந்தனர்.
#கோட்டாபயராஜபக்ஷ #GotabayaRajapaksa #GR

0 கருத்துகள்