பட்டதாரி பயிலுனர்களுக்கான நவம்பர் மாத கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை!

 

கடந்த செப்டம்பர் மாதம் பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்ற கிழக்கு மாகாண பட்டதாரி பயிலுனர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பயிற்சி கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என பயிலுனர் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.


கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணங்களோ கொரோனா நிவாரண நிதிகளோ அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலைமை இப்படியே தொடருமானால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.


அரச ஊழியர் (அதுவும் பயிலுனர்) எனும் போர்வையில் தங்கள் வாழ்வாதாரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என

கிழக்கு மாகாண பட்டதாரி பயிலுனர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்