ரிஸ்வி முப்தியின் வட்டிலப்ப கதையின் உண்மை தன்மை என்ன.? விபரம் இதோ!!



இன்று(10. 11-12.2020) திகதிய சகல சிங்கள தொலைக்காட்சிகளிளும் உயிா்த்த ஞாயிறு சம்பந்தமான ஜனாதிபதிக் கமிஸனுக்கு அழைக்கப்பட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாத் தலைவா் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி அங்குள்ள கமிஸனில் உள்ளவா்களுக்கெல்லாம் வட்டிலப்பம் கொண்டு வந்ததாகவும் அதனை அவரது வாகனத்தில் பேப்பா் பக்கட்டுக்களை ஏற்றி இறக்குவதனை அதனை கமிஸன் ஏற்றுக் கொள்ளவில்லை என கிரு, தெரண, சுவா்ணவாகினி செய்தி வெளியிட்டது. 




கடந்த 2018.06.10ஆம் திகதி முஸ்லிம் முஸ்லிம் அல்லாத ஊடகவியாலா்களுக்கு நோன்பு திறக்கும் நிகழ்வொன்றினை கொள்ளுப்பிட்டியில் உள்ள கோடடலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்தது அதற்கு நானும் சென்றிருந்தேன். 




அப்போது அங்கு வருகை தந்த சகல ஊடகவியலாளருக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அதே பக்கட்டுக்களை பகிா்ந்தளித்திருந்தது. அதில் சிங்கள மொழி மூலமான தமிழ் ஆங்கில மொழி மூலமான அவா்களளது ஜம்மியத்துல் உலமாவிலான வெளியிடப்பட்ட குர்ஆன் விளக்கங்கள், ஹலால் என்றால் என்ன ? சிறு துஆக்கள் மொழிபெயாப்புக்கள் எங்களுக்கு தரப்பட்டது. 




அதே வெளியிடுகள் கொணட பைகளே இன்றும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. 




ஆனால் அதனை ஜனாதிபதிக்கு கமிஸனுக்கு வட்டிலப்பம் பாா்ஸல் கொண்டு வந்தாகவும் அதனை கமஸன் ஏற்றுக் கொள்ளவில்லை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மை என்ன? இது பற்றி ஜம்மியத்துல் உலமா ஊடகங்களுக்கு அந்த பாா்ஸலில் கொண்டு சென்றது என்ன ? என்பதனை தெளிவுபடுத்தல் வேண்டும் ( அந்தக் கமிஸனில் ) . (இங்கு என்னுடன் படத்தில் தொப்பி அணிந்துள்ள இப்பாம் நிஸாம் ஜலன்ட் பத்திரிகையின் ஊடகவியலாளா் வேற்று மத திருமணம் செய்து கொண்டதால் இஸ்லாமிய ஆங்கில மொழி மூலமான நுால்கள் குர்ஆண் மொழிபெயா்ப்பினை அவா் தலைவரின் மேலதிகமாக கேட்டு அதனைப் பெற்றுக் கொண்டாா் )




போலிச் செய்திகளை வெளியிடும் இனவாத ஊடகங்களின் பேச்சுக்களை நம்பி எம்மவர்கள் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்த்துக்கொள்ளவும்! 




ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமத்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்