-ரிம்சி ஜலீல்-
கடந்த சில நாட்களாக நடைபெற்ற கராத்தே National championship போட்டியில் கராத்தே பயிற்றுவிப்பாளர் இம்ரான் வஹாப் பங்கு கொண்டு பல போட்டியாளர்களை முறியடித்து அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தை தன்வசமாக்கி தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்து கொண்டார்.
கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் சுமார் 22 வருடகாலமாக இத் தற்காப்புக்கலையை மாணவர்களுக்கு சிறப்பாக கற்றுக் கொடுத்து அவர்களையும் பல போட்டிகளில் பங்குறச் செய்து வெற்றிகளை தம்வசப்படுத்த உருதுணையாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.


