- Tw -
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னிறுத்தப்படக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் இன்றைய தினம் -27- இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாணக்கியனை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.
சிறீதரன் முன்வைத்த கோரிக்கையை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பலர் பேச்சளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்