இதில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் எதிர்கால மாகாணசபை தேர்தல் போன்ற பல முக்கியமான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் .இதன்போது விரைவில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடுதலான நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் உறுதிமொழி அளித்தார்.
அத்துடன் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் நேரடியாக கலந்துரையாடி குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் தீர்த்து கொள்ள இருப்பதாகவும் இச்சந்தர்ப்பத்தில் முடிவுகள் எட்டப்பட்டது. இச்சந்திப்பு மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்றது.
(சதாசிவம் நிரோசன்)

0 கருத்துகள்