கொரோனா ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் வடக்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!



கொரோனாவால் ஜனாஸாக்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் இன்று (03) போராட்டங்களை நடத்த உள்ளனர்.

எதிர்ப்பு பேரணி ஒன்றை அவர்கள் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரணைதீவு என்பது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். 108 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர்.

இதேவேளை இரணைதீவில் வசிப்பவர்கள் யாரும் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்