தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடுப்பூசி திட்டத்தின் பின்னர் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய முதற்கட்டமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்