ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித் தொடரின் 14 வது நிகழ்ச்சி இன்று (13) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும், நானும், நிசங்க சேனாதிபதியும் இருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினரை அழைத்து அறிந்த விடயங்களை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்களை கேட்க சென்றபோது, எனக்குத் தெரியாது. நான் மறந்துவிட்டேன். இதுபோன்ற தகவல்கள் தனக்குத் தெரியாது என்று கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் எப்போதும் இத்தகைய அபத்தமான குற்றச்சாட்டுகளையே கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்