கைதான ETI பணிப்பாளர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்



சிஐடியினால் மீண்டும் கைது செய்யப்பட்ட, ETI நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோருக்கு எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த நால்வரும் இன்றையதினம் (17) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.


நேற்றையதினம் (16) பண தூய்மையாக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்