இதுவரை பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்திருந்த அரசாங்கம் தற்போது பேக்கரி உற்பத்தியாளர்கள் பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட தேங்காய் எண்ணையில் புற்றுநோய் காரணி கண்டறியப்பட்டதன் பின்னர், நாட்டு மக்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர். சுத்திகரிக்கப்படாத எண்ணெய் இறக்குமதி காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
பாம் எண்ணெய் தடை செய்யப்பட்டதனால் பேக்கரி உற்பத்தியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான மாற்றுவழியினை அரசாங்கம் முன்வைக்கவில்லையெனவும் குற்றஞ்சாட்டி, தற்காலிகமாக பேக்கரி உற்பத்தியை நிறுத்தப்போவதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் கூறியதை அடுத்து, அரசாங்கத்தினால் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்