மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு அக்கரைப்பற்றில் பெற்றோர் கவலை பொலிசில் முறைப்பாடு கையளிப்பு

 


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில்  தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்


ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பாலமுனை மற்றும் ஒலுவில்  ஆகிய பிரதேச பாடசாலைகளில் குறிப்பாக பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஆரம்பம் ஆகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் களில் மாணவிகளுக்கு பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு அலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது


இதனால் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்வதோடு சில மாணவிகள் இடை நடுவில் கல்வியை கல்வி கைவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 


பாடசாலைகள் அமையப்பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில் பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடைய ம் நேரங்களில் விசேட போக்குவரத்து போலீசாரை சேவையில் ஈடுபடுத்துமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் 


இது தொடர்பாக பாடசாலை அபிவிருத்தி சபையினரும்   நலன் விரும்பிகளும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம்  முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0 கருத்துகள்