பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், டிக்டொக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் பாகிஸ்தான் தற்காலிகமாக தடை செய்தது.






பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், டிக்டொக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் பாகிஸ்தான் தற்காலிகமாக தடை செய்துள்ளது.



பாகிஸ்தானிற்குள் அனைத்து சமூக வலைத்தளங்களும் சில மணிநேரத்திற்கு தடை செய்ய பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதன்படி, இன்றைய தினம் மாலை 4 மணி வரை சமூக வலைத்தளங்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.


தடை செய்யப்பட்ட மதக் கட்சிகளினால் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள வன்முறைகளை தவிர்த்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நோக்குடனேயே இந்த சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்