அவசர நிலைமைகள் தவிர, திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்...!!!!

 




கொவிட் -19 வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளதால்,

அவசர நிலைமைகள் தவிர, திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வீதி தடைகளை போட்டு  பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்குமாறு ஆளுநர் இன்று (23) காலை பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தினார்.


இதற்கிடையில், திருகோணமலையில் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்துமாறும் ஆளுநர் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தினார். 


தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்  சட்டத்தை மீறும் எவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஆளுனர் பாதுகாப்பு படையினருக்கும் பணிப்புரை  விடுத்தார்.


இதுவரை ஏராளமான சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ள கோமரங்கடவெல  மற்றும் பதவி ஸ்ரீ புர  பகுதிகளில் இருந்து திருகோணமலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சிறுநீரக நோயாளிகளுக்கு கொவிட் -19 தொற்று மிக வேகமாக பரவுவதை  சுகாதாரத் துறையினர் வெளிப்படுத்தியுள்ளதால் ஆளுநர் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்