வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் ரிஷாடின் கைது - மனோ கணேசன்.


 முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று கைதானமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு தெரிவித் துள்ளார்.

‘பாராளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் ‘அதிகாலை 3 மணி’ க்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ‘ஆவேசம்’ என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?’ எனப் பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்