தேங்காய் எண்ணெய் பிரச்சினை காரணமாக கொத்து விற்பனை குறைவடைந்தது.


தேங்காய் எண்ணெய் பிரச்சினை காரணமாகப் பொருளாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது என அகில

இலங்கை உண­வக உரி­மை­யா­ளர்­கள் சங்­கம் தெரிவித்துள்ளது.


தற்போது நிலவும் சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய்யில் எது நல்லது எது கெட்டது என அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது.


விசேடமாகத் தேங்காய் விலை அதிகரித்தமையால் நாங்கள் அதிகமாகத் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தித்தான் உணவுப் பொருட்கள் தாயாரிப்பில் ஈடுபட்டுவந்தோம் தற்போது குடி தண்ணீரில் தான் உணவு தயாரிக்கவேண்டும்.


அரசாங்கத்தின் கவனக் குறைவால் எங்களின் வியாபாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


வடை, மரக்கறி ரோட்டி, கொத்து, பெட்டிஸ் மற்றும் சமைக்கும் உண வுகளுக்கும் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு மிக அவசியமாகும்.


தற்போது நுகர்வோர்களின் வருகையும் குறைந்துள்ளது என அகில இலங்கை உண­வக உரி­மை­யா­ளர்­கள் சங்­கத்தின தலைவர் அசேல சம்பத்  தெரி­வித்­துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்