அல் குர் ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்து "Muslim Law" என்ற நூலை எழுதியவர் மரணம்

 


இனவாதம் அறிவுக்கண்களை மறைத்து இஸ்லாமிய சட்டங்கள் மீதான தப்பெண்ணங்கள் மலிந்திருக்கும் ஒரு யுகத்தில் இஸ்லாமிய சட்டங்களின் மூலாதாரமான அல் குர் ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்து "Muslim Law" என்ற நூலை எழுதியது மட்டுமல்லாமல் இஸ்லாமிய சட்டங்களை ஏற்கெனவே அறிந்திருந்தால் எத்தனையோ வழக்குகளை இன்னும் சிறப்பாக கையாண்டிருப்பேன் என்று பகிரங்கமாக கூறிய உண்மையான பௌத்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கருனாரத்ன ஹேரத்தின்  மரணச் செய்தி கவலை தருகின்றது.


"Muslim Law" நூல் வெளியீட்டு நிகழ்வில் ஆற்றப்பட்ட உரைகளின் லிங்குகளை அண்மையில்தான் ஒரு பதிவில் ஒன்று திரட்டியிருந்தேன்.


தமது மார்க்க கல்வியை இளம் பிராயத்தில் கற்பதற்கு தடை போடத்துடிக்கும் இனவாதிகளின் ஆட்சிக்காலத்தில் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்து கொள்கின்றோம்.

அவரின் பிரிவினால் கவலையுற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கிடைத்திட பிரார்த்திக்கின்றோம்.


-வஃபா பாறுக்-

கருத்துரையிடுக

0 கருத்துகள்