இந்த மாதம் 6 ம் திகதி முதல், மாதத்தில் இரண்டு நாட்கள் எமது வைத்திய சாலையில் தோல் நோய் கிளினிக் ஆரம்பமாகியுள்ளது என்பதை இப்பிரதேச மக்களுக்கு மன மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்.
அத்துடன் இங்கு வருகை தரும் தோல்நோய் கிளினிக் நோயாளர்களுக்கு விஷேடமாக தயாரிக்கப்பட்ட கிளினிக் கொப்பிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே தோல் நோய் உள்ளவர்கள் முன்கூட்டியே எமது வைத்திய சாலையில் உங்களை பதிவு செய்து உங்களுக்கான தினத்தையும் நேரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் பொது மக்களாகிய உங்களுக்கு அறியத்தருவதுடன்,
இம்முயற்சியில் ஆணிவேராக இருந்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr. IM.Jawahir மற்றும் தோல் நோய் விஷேட வைத்திய நிபுணர் Dr.IL.Mahil ஆகியோருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இவ்வாறான கிளினிக் ஒன்றை எமது வைத்திய சாலையில் நடாத்த பூரண விருப்பத்தையும் அனுமதியையும் ஆலோசனைகளையும் வழங்கிய, எமது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.G.Sukunan சேர் அவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 கருத்துகள்