இவ்வுலகில் நல்லவர்களை அல்லாஹ் சோதித்தாலும் ஒரு போதும் கைவிடமாட்டான்.

 






இன்று 2021.04.09ம் திகதி இரவு 1:30am மணியளவில்  தூங்குவதற்கு ஆயத்தமாகும் போது எனது நண்பர் Bagawanthalawe Rahula Himi அவர்களது முகநூல் வாயிலாக உள்ளத்தினை திடிக்கிட வைக்கக் கூடிய ஒரு பதிவினைப் பார்க்க கிடைத்ததோடு அதே சமயம் தொலைபேசி அழைப்பொன்றும் வருகின்றது.


எனது நண்பர் சாது அவர்களது குரலுடன் சுருக்கமாக புன்னகையோடு நான் அவசர நிகழ்வொன்றிற்காக கொழும்பிற்கு செல்லும் வழியில் சம்மாந்துறையில் தற்போது கார் சிறிய உபாதைக்குள்ளாகி விட்டது எனக் கூறிவிட்டு அதே வினாடியில்

நீங்கள் வர வேண்டாம். இன்னுமொரு வண்டி வருகிறது நான் செல்கின்றேன் எனக் கூறினார்.


உடனடியாக சாது அவர்களது அழைப்பினை துண்டித்து விட்டு எனது மோட்டார் வாகனத்தில் எனது சொந்தவூரான நிந்தவூரிலிருந்து சாது அவர்களது இருப்பிடமான சம்மாந்துறைக்குச் சென்று கழ நிலவரத்தினைப் பார்க்கும் போது ஒரு இளைஞர் படையே நடுநிசையில் சாது அவர்களுடன் அங்கு குழுமி இருக்கின்றனர்.


இச் சந்தர்ப்பத்தில் சாது அவர்களது முகநூல் பக்கத்தினைப் பார்த்த கனடாவில் வசிக்கக் கூடிய காத்தாங்கூடியியைச் சேர்ந்த சகோதரர் உடனடியாக காத்தாங்கூடியில் உள்ள அவரது இரண்டு வாகனத்தினை 40நிமிடத்திற்குள் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் சம்மாந்துறைக்கு அழைப்பித்து தந்து ஏற்பாடு செய்து தந்தார்.


அதே நிமிடம் மற்றுமொரு வாகனத்தில் பாதுகாப்பான முறையில் எனது நண்பரை வழியனுப்பி வைத்தேன்.


இந்த நேரமென்றும் பாராமல் பல இளைஞர்கள் வருகை தந்ததோடு அதிகமான தொலைபேசி அழைப்புக்களை விடுத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்கள் நிலவரத்தினை சாதுவிடம் கேட்டறிந்து கொன்டார்கள்.


எது எவ்வாறிருப்பினும் எமது இஸ்லாமிய பண்பாடும் அழகிய நற்குனமும் மதம் கடந்த மனிதாபின பணியும் ஏனைய உள்ளங்களினை நேர்வழிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


உண்மையில் இந்த நாட்டில் உள்ள ஒரு பிரபல பெளத்த மதகுரு பணத்தினை விட பல நல்ல உள்ளங்களை சம்பாதித்திருக்கின்றார்.


பீ அமானில்லாஹ் சென்று வாருங்கள்.


மெளலவி.சிம்லி ஆதம்(நஹ்ழி)

2021.04.09.

கருத்துரையிடுக

0 கருத்துகள்