தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 திகதி வரை நீடிக்கப்படும்.


நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு

 எதிர்வரும் அடுத்த மாதம் 7 திகதி வரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.


இதில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டர் பெர்ணான்டோ நாளைய தினத்தில் நாடு முற்றிலும் திறக்கப்படாது என்றும், ஆனால் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே சென்று வாங்கிக் கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.


முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்று நாளை (25) அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டு நாளை இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.


அத்துடன் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்வும்,


பின்னர் ஜூன் 4ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் பயணத்தடை தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் பொதுமக்கள் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வாகனங்களில் பயணம் செய்வது தடுக்கப் பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்