ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் சிறுமி வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் விழுந்து பலியான சம்பவம் ஒன்று இன்று(24) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி சிராஜ் நகர் மயில் தீவு எனும் முகவரியை கொண்ட ஏ.அகிலா வயது(02) என தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோட்டத்தில் விழுந்து உயிரிழந்துள்ள குறித்த சிறுமியை காணவில்லை என சுமார் அரைமணி நேரம் தாய் தேடி வந்த நிலையில் குறித்த நீர் ஓடையில் இருந்து சுமார் நானூறு மீற்றர் தூரத்தில் அதே ஓடை நீர் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது. குறித்த உயிரிழந்த சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 கருத்துகள்