ஹெரோயினுடன் பயணித்தவர் கண்டி போலீசாரால் கைது.


வேன் ஒன்றில் 400 கிராம் ஹெரோயினுடன் பயணித்த

 சந்தேகநபர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று (05) மாலை கண்டி, யட்டவீதிய பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 203 கிராம் ஹெரோயினும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் பொரள்ள பகுதியில் வைத்தும் 15 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் 630 கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையின் சந்தை பெறுமதி 63 இலட்சம் ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்