பயங்கரவாதி ஸஹ்ரானின் 04/21 தாக்குதலுடன் தொடர்புடைய 9 சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் முடிந்தது.





(செ.தேன்மொழி)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய 17 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுள் 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து அவற்றுடன் தொடர்புடைய 32 நபர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.





இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :


ஏப்ரல் – 21 தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில், 17 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவற்றும் 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து அவற்றுடன் தொடர்புடைய 32 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



கேகாலை , கண்டி ,குருணாகல் ,புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய நீதிவான் நீதிமன்றங்களிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எஞ்சிய 8 சம்பவங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்காக , சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் , பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின்போது புதிதாக கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டும், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்