பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்தால் பாரிய பொருளாதார புரட்சி ஏற்படும்.


கடந்த காலங்களில் பொருளாதாரத்துறையில் பெரிய பங்காற்றி அனுபவம் கொண்ட ஒருவரை பொருளாதார கட்டமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக எண்ணி முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்த பெசில் ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினராக ஆளும் கட்சி இன்று நியமித்துள்ளது. அவருக்கு தகுதியான அமைச்சுப்பதவிகளையும் இந்த அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் வழங்க தயாராக உள்ளதாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.


இன்று (07) மாலை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி திருத்த சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் தனதுரையில்,


புதிய எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸ அவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் இந்த நாட்டின் வர்த்தகர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை பசில் ராஜபக்ஸ அவர்கள் செய்ய வேண்டும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்