ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதிக்கு அரசு தடை விதிப்பதாக வெளியாகும் செய்திகளை திறைசேரிச் செயலாளர் நிராகரித்தார்.





ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபடி கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் நறுமணத் திரவங்கள் உள்ளிட்ட பல மின்னணு பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு இருப்புக்களை வலுப்படுத்துவதற்காக பல ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியைக் கடுமையாகக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பல வார இறுத பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. (யாழ் நியூஸ்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்