திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் - பசில் ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கியிருக்கும் கூட்டுத்தாபனங்கள்!!! (தமிழில்)



புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் தொடர்பான திருத்தங்களுடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட திருத்தங்களாவன இரு அமைச்சுகளின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகள் தொடர்பானவை என வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கிய மத்திய கலாச்சார நிதி உட்பட பல நிறுவனங்கள் இப்போது புதிய வர்த்தகானி அறிவித்தலின்படி கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

புதிய பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து குறித்த அமைச்சகத்தை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், பிரதமர் ராஜபக்சவுக்கு புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒதுக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்