மாடு அறுப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ள நிலையில்
மாடு அறுப்பதை நிறுத்த அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறதே தவிர, பாராளுமன்றத்தின் மூலமாக அதற்கான சட்டம் இயற்றப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் செயலாளருடன், தொலைபேசியில் தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் அவருக்கு இதனை தெளிவுபடுத்தி உள்ளார்.
நாட்டில் சட்டம் நிறைவேற்றப்படாத நிலையில் அமைச்சரவை முடிவை வைத்து மாடறுக்க தடை செய்ய முடியாது என அவர் கூறி உள்ளார்.
எனவே எக்காரணம் கொண்டும் குர்பான் கொடுப்பதற்கு மாகாண சபைகள் அமைச்சு தடை விதிக்கக்கூடாதென கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் குறித்த கடிதம் கோரிக்கையே தவிர உத்தரவு அல்ல என கூறி உள்ளதாகவும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை உள்ளூராட்சி மன்றங்களுக்கே உள்ளது என கூறி உள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்