ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தாத 73,000 நுகர்வோருக்கு
தண்ணீர் வழங்குவதை நிறுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு தயாராகி வருகிறது. நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சு எடுத்த முடிவின்படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன
இந்த நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை ரூ. 145 மில்லியன் ஆகும்
அதேவேளை நுகர்வோரின் கட்டணங்கள் செலுத்தப்படாததால் 8 பில்லியன் ரூபாவை இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு இழந்துள்ளது.
மேலும் 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை செலுத்துமாறு எஸ்.எம். எஸ் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பிய பிறகு 100 வாடிக்கையாளர்கள் மட்டுமே தங்கள் பில்களை செலுத்தியதாக நீர் வழங்கல் சபை கூறுகிறது.
சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியால் நாடு முழுவதும் உள்ள பல ஹோட்டல்கள் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை மேலும் இந்த நிறுவனங்களும் மேற்படி வாடிக்கையாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
நீர் வழங்கள் சேவைகளை வழங்க ஒரு மாதத்திற்கு 2 பில்லியன் தேவைப் படுகிறது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

0 கருத்துகள்