சாரதியை தாக்கிவிட்டு பணம் பறிப்பு! சந்தேகநகர்கள் கைது

நுவரெலியா, பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியில் உள்ள டியன்சின் நகரில், குடிபோதையில் இளைஞர்கள் சிலர் சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளமையுடன், அவரிடமிருந்து 70 ஆயிரம் ரூபா பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி வர்த்தக நிலையங்களுக்கு பொருள்களை விநியோகிக்கச் சென்ற சாரதி மீதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தாக்குதலுக்குள்ளான 27 வயதுடைய சாரதி பொகவந்தலாவை வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில், சாரதி பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொகவந்தலாவை பொலிஸார், சம்பந்தபட்ட இளைஞர்களை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும், டியன்சின் நகரில் இவர்கள் ரவுடிகளை போல நடந்துகொள்வதாகவும் பாதிக்கப்பட்ட பலர் குற்றம் சுமயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்