2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி , எதிர்வரும் நவம்பா் மாதம் 17ஆம் திகதிக்குள் அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களிலும் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ,18 வயதைப் பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக, வாக்காளர் பதிவுச் சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்