சடலங்களை தகனம் செய்யும் கட்டணம் அதிகரிப்பு?



இலங்கையில் எரிவாயு விலை உயர்வடைந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்படும் நிலையங்களில் அதற்கான கட்டணங்களும் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ,இதுவரைக் காலமும் ஒரு சில பிரதேச சபை மற்றும் நகர சபைகளால் 8000 ரூபா அறவிடப்பட்டு வந்தன.

இருப்பினும் விலை அதிகரித்த பின் தற்சமயம் 10,000 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ,வேறு சில பிரதேசங்களில் 9000 ரூபாவாக இருந்த இந்த கட்டணம், தற்சமயம் 11,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்