அதன்படி ,இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,154 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 10 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.
மேல் மாகாணத்திலும், கண்டி, பதுளை, இரத்தினபுரி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்நிலையில் , மேல்மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் ,இதேவேளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென டெங்கு ஒழிப்பு பிரிவு வலியுறுத்தியுள்ளது.