“நீதியை அடைவதில் உதவிய IPU அமைப்பிற்கு நன்றி” – ரிஷாத்

 


 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த 14ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.



“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இறுதியாக பிணையில் விடுவிக்கப்பட்டதில் #IPU மகிழ்ச்சி அடைகிறது. IPU அவரது விசாரணையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்..” எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த டுவிட்டர் மகிழ்ச்சி செய்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பதிலளிக்கையில்;



“எனது வழக்கை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும், நீதியை அடைவதில் நீங்கள் எனக்கு வழங்கிய உதவிக்காகவும், இலங்கை உட்பட 179 உறுப்பு நாடுகளின் உலகளாவிய அமைப்பான IPU அமைப்பிற்கு நன்றி..” எனத் தெரிவித்துள்ளார்.


ஆர்.ரிஷ்மா

கருத்துரையிடுக

0 கருத்துகள்