இன்று தொடக்கம் டிசம்பர் 10 வரை தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகள்



(ஆர்.யசி)


விசேட பாராளுமன்ற அமர்வுகள் இன்றையதினம் கூடுவதுடன் நாளை தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும்.


அதேபோல் எதிர்வரும் 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பார்.


மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், இதற்கமைய வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியானதொரு கட்டமொன்றை வழங்குவதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்