கடந்த 26ஆம் திகதி காலை வனவாசல பொசன்வத்தை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
உயிரிழந்தவர் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த 40 வயதான மொஹமட் இர்ஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நண்பர்கள் குழுவினால் கடத்தப்பட்ட இவர், கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வனவாசலை பொசன்வத்தை பகுதிக்கு அவர் கொலை செய்யப்பட்டு காரில் கொண்டு செல்லப்படும் காட்சி தொடர் சிசிடிவி காட்சிகளை பொலிசார் இன்று (05) வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் களனி பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.:
0 கருத்துகள்