தலதா மாளிகை வளாகத்தில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் நபர் கைது!



பங்களாதேஷ் பிரஜை ஒருவர் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு புனித தலதா மாளிகை வளாகத்தை வீடியோ செய்தார் என சந்தேகத்தின் பேரில் கண்டி தலதா மாளிகை பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று (05) காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சந்தேக நபர், தான் நடத்தும் யூடியூப் சேனலுக்கு உரிய காட்சிகளைப் பெற்றதாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.


தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமெராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் ட்ரோன் கமெரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி, கமெரா மற்றும் சந்தேகநபரின் கடவுச்சீட்டை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.டபிள்யூ.இத்தமல்கொட தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்