யாழ்ப்பாணம் – அரியாலை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் இருந்து 68 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
229 கிலோ 350 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.
இன்று (21) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, டிங்கி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்