சவூதி அரேபியாவில் 4 நாட்கள் தொடர்ந்து பாரிய இசைத்திருவிழா - 07 லட்சம் பேர் பங்கேற்பு

 




சவுதி அரேபியாவில் கடந்த வாரம் 4 நாட்களாக இடம் பெற்ற பாரிய இசைத் திருவிழாவில் 07 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றதாக சவுதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


2021ம் ஆண்டை வழியனுப்பவும், 2022ம் ஆண்டை வரவேற்க்கவும் நடத்தப்பட்ட இந்த இசைத் திருவிழாவில் உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 


நான்கு நாட்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 732000ம் பேர் கலந்து கொண்டதாக சவுதி அரேபியாவின் பொது பொழுதுபோக்கு அதிகார சபையின் தலைவர் துர்கி அல்ஷெய்க் தெரிவித்துள்ளார்.


இதுபோன்றதொரு நிகழ்ச்சி இதற்கு முன்னர் ரியாதில் நடைபெறவில்லை. பாரிய சனக்கூட்டம், இசை, VIP அறைகள், வழக்கத்திற்கு மாற்றமான ஆடைகள் என அனைத்துமே புதிய அனுபவம் என இந்நிகழ்வில் பங்கேற்ற பெண்ணொருவர் ஏ.எப்.பி  செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்