எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
சுகாதார அமைச்சின் கடித உரையின் கீழ், அறிக்கையொன்றை வெளியிட்டு, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கட்டாயமாக்குவதற்கான சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் பிரகாரமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
இரண்டு தடுப்பூசி மருந்தளவுகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு விசேட செயலியொன்றை (APP) அல்லது QR CODE ஒன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
கொவிட் தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை பரிசோதனை செய்யும் பொறுப்பு, உரிய இடத்தின் முகாமைத்துவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
உதாரணமாக, தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையின்றி திரையரங்குக்குள் சென்றிருப்பார்களாயினும், அதற்கான பொறுப்பை முகாமைத்துவமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறுகின்றார்.
தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதிருப்பதற்கு எந்தவொரு நபருக்கும் உரிமை உள்ளதாக கூறிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அதனூடாக ஏனையோரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்