12.30க்கு காஸ் அடுப்பு வெடித்தது வாழைச்சேனையில் சம்பவம்
எச்.எம்.எம்.பர்ஸான்
சமையல் எரிவாயு அடுப்புகள் வெடிக்கும் சம்பவங்கள், அண்மைய காலங்களில் இடம்பெறாமல் இருந்த நிலையில், இன்று (06) பிற்பகல் 12.30 மணியளவில் காஸ் அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைச்சேனை - 5 தபாலக வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த வீட்டின் பெண்மணி சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது காஸ் சிலின்டரின் வயர் திடீரென தீப்பற்றிக் கொண்டது. சட்டென காஸ் அடுப்பும் வெடித்துச் சிதறியுள்ளது.
சிலின்டருக்கும் காஸ் அடுப்புக்கும் இடையிலான இணைப்பு அவசரமா துண்டித்ததன் காரணமாக பேரனர்த்தம் தவிர்க்கப்பட்டது என வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றிருந்த வாழைச்சேனை பொலிஸார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments: