Headlines
Loading...
  இலங்கை முஸ்லிம்களை பழிவாங்கவா, இஸ்ரேலின் உதவி நாடப்படுகிறது..?

இலங்கை முஸ்லிம்களை பழிவாங்கவா, இஸ்ரேலின் உதவி நாடப்படுகிறது..?


எம்.எம்.ஸுஹைர் (ஜனாதிபதி சட்டத்தரணி)



இலங்­கையில் இடம்­பெற்ற படு­ப­யங்­க­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பான புதுப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையை ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இம்­மாதம் 28ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார்.

குறிப்­பாக இலங்­கையில் நடப்­ப­தாக கூறப்­படும் இத்­த­கைய உரிமை மீறல்­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கு கடந்த ஆண்டில் ஜெனீ­வாவில் நிறு­வப்­பட்ட விசேட பொறி­மு­றை­யா­னது ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவை பலப்­ப­டுத்த வழி­வ­குத்­தது. அந்த சிறப்புப் பொறி­மு­றைக்கு ‘இலங்கை பொறுப்­புக்­கூறல் திட்டம்’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 26 ஜன­வரி 2021 அன்று ஐ.நா மனித உரி­மைகள் உயர் ஸ்தானிகர் அலு­வ­லகம் வெளி­யிட்ட முன்­னைய அறிக்­கையில் “தேசிய அளவில் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்­கத்தின் ‘இய­லாமை மற்றும் விருப்­ப­மின்மை’ தெளி­வாக நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. இந்­நி­லையில், சர்­வ­தேச குற்­றங்­க­ளுக்­காக நீதியை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான சர்­வ­தேச நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய நேரம் வந்­துள்­ளது” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த சூழ்­நி­லையில் இம்­முறை ‘இலங்­கையில் அனைத்துத் தரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்ட சர்­வ­தேச குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் மற்றும் வழக்­கு­களை அவர்­களின் தேசிய நீதி­மன்­றங்­களில் தொடர்­வ­தற்கு’ ஆணைக்­கு­ழுவின் உயர் ஸ்தானிகர் பாச்லெட், ஐ.நா.வின் உறுப்பு நாடு­களை மீண்டும் ஒரு­முறை மிகவும் அழுத்­த­மாக வலி­யு­றுத்­த­வுள்ளார்.

இந்த விட­யத்தில் அமெ­ரிக்­காவின் கடந்­த­கால நடை­மு­றை­க­ளின்­படி இலக்கு வைக்­கப்­பட்ட தண்­ட­னைகள் குற்றம் சாட்­டப்­பட்ட குற்­ற­வா­ளி­களின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே இருக்கும். இலங்­கையின் அப்­பாவி குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு இத்­த­கைய தண்­ட­னைகள் விதிக்­கப்­ப­டு­வது எத்­த­கைய அதிர்ச்­சி­யையும் தரு­வ­தில்லை. காரணம் இலங்கை மக்கள் இவ்­வா­றான தண்­ட­னை­களை ஏன் எதற்கு என்று தெரி­யா­ம­லேயே அனு­ப­வித்து வரு­கின்­றனர். இலங்­கையில் அதற்­கான பல வழக்­குகள் ஆதா­ரங்­க­ளாக பதி­வா­கி­யுள்­ளன. உதா­ர­ண­மாக ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று குற்றம் சாட்டி நேரடி குடும்ப உறுப்­பி­னர்­களை கைது செய்து பல மாதங்­க­ளாக தடுத்து வைத்த சம்­ப­வங்கள் ஏராளம் உண்டு. அவர்களில் ஒரு சிலர் சட்­டமா அதி­பரின் பரிந்­து­ரையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். உதா­ர­ணத்­திற்கு ஒரு வழக்கில் தேயிலை ஏற்­று­ம­தி­யாளர் ஒருவர், இரண்டு வரு­டங்­களும் ஒன்­பது மாதங்­களும் அரச தடுப்புக் காவலில் இருந்த பின்னர் விடு­விக்­கப்­பட்டார். இலங்­கையில் கடு­மை­யான மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்­கான தண்­ட­னை­யாக விசா மறுக்­கப்­ப­டு­வ­தா­னது, அவர்­க­ளு­டைய குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் மருத்­துவம், கல்வி அல்­லது பிற நோக்­கங்­க­ளுக்­காக செல்­வ­தற்கு அனு­ம­திக்கும் நாடு­க­ளுக்குச் செல்­வதைக் கூட தடுக்­கலாம். இது ஒரு­வேளை நடந்தால், குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான நபர்கள் அந்­தந்த உறுப்பு நாடு­க­ளுக்குச் செல்லும் போது கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யமும் உள்­ளது.

மனித உரி­மைகள் மீதான ‘கிரி­மினல்’ மீறல்கள் வழக்­கு­களில் முன்னர் விதந்­து­ரைத்­துள்ள தண்­ட­னைகள் போது­மா­னது அல்ல என வாதி­டு­ப­வர்­களும் உள்­ளனர். மீறல்கள் தங்கள் அதி­கார வரம்­பிற்குள் வரும்­போது அவற்றைச் சீர்­செய்­வ­தற்கு அரச வழக்­க­றி­ஞர்­களும் நீதித்­து­றையும் உட­னடி நட­வ­டிக்கை எடுப்­பதைத் தவிர்ப்­ப­தற்கும் எதிர்­பார்த்த தண்­ட­னைகள் போதாது என்றே அவர்கள் கரு­து­கின்­றனர். எவ்­வா­றா­யினும் ஜெனீ­வாவின் இலங்கை பொறுப்­புக்­கூறல் பொறி­முறை திட்­டத்தை மதிப்­பி­டு­வ­தற்கு எதிர்­வரும் 2022 மார்ச் அமர்­வு­களின் முடி­வுகள் வெளி­யாகும் வரை நாம் பொறுத்­தி­ருக்க வேண்டும்.

இந்­நி­லையில் பார­பட்­ச­மான நடை­மு­றை­க­ளுக்கு நாம் முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளோமா? சிஐடி, ரிஐடி மற்றும் அரச புல­னாய்வு அதி­கா­ரிகள் உட்­பட பல்­வேறு பாது­காப்பு நட­வ­டிக்கை கார­ண­மாக 40க்கும் மேற்­பட்ட சிவில் சமூக அமைப்­புகள் தேவை­யற்ற கெடு­பி­டி­க­ளுக்கும் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கும் முகம்­கொ­டுப்­ப­தாக கூறப்­படும் புகார் மனுக்கள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக ஐ.நா அறிக்கை கூறு­கி­றது. மேலும் அனைத்து வகை­யான கண்­கா­ணிப்­பு­க­ளையும் உட­ன­டி­யாக நிறுத்­து­மாறும் அறிக்கை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரை ஓரங்­கட்டும் அள­விற்கு உரிமை மீறல் மோச­ம­டைந்­துள்­ள­தாக அந்த அறிக்கை எச்­ச­ரிக்­கையும் விடுத்­துள்­ளது. உயர்­மட்ட அரச அதி­கா­ரி­களின் பிள­வு­ப­டுத்தும் கருத்­தா­டல்கள் மற்றும் பார­பட்­ச­மான வெறுப்புச் சொல்­லா­டல்கள் துரு­வ­மு­னைப்பை ஏற்­ப­டுத்தி வன்­மு­றையை உரு­வாக்கும் அபா­யத்­திற்கும் கட்­டியம் கூறு­கி­றது. கொவிட்-19 இன் இடர்­கால சூழலிலும், ஏப்ரல் 21 இன் ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்­னரும் அப்­பாவி இலங்கை முஸ்லிம் சமூகம் அதி­க­ளவில் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த உண்­மைகள் மறுக்­கப்­பட முடி­யுமா? கோவிட் கார­ண­மாக மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை அவர்­க­ளு­டைய மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு இணங்க அடக்கம் செய்­வ­தற்­கு­ரிய மத உரி­மைகள் மறுக்­கப்­பட்­டது முதல் அண்­மைக்­கா­லத்தில் முஸ்லிம் சிறார்­க­ளுக்­கு­ரிய இஸ்லாம் பாடப்­புத்­த­கங்கள் மீண்டும் எழு­தப்­பட வேண்டும் என்ற அரச தரப்பின் பாகு­பா­டுகள் வரை உரிமை மீறல் பட்­டியல் நீண்டு செல்­கி­றது.

முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக்கும் இஸ்­ரே­லிய திட்டம் முத­லீட்­டா­ளர்­க­ளையும் சுற்­றுலாப் பய­ணி­க­ளையும் பாதிக்கும்

இப்­போது நாம் என்ன செய்து கொண்­டி­ருக்­கிறோம்? இலங்கை அரசு பாது­காப்பு மற்றும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் உத­வு­வ­தற்­காக இஸ்­ரேலை இங்கு அழைத்து வரு­கி­றது. நண்டைச் சுட்டு நரி­களை காவல் வைப்­பது போல 75 ஆண்­டு­க­ளாக பலஸ்­தீ­னி­யர்­களின் சொந்த பூமியை ஆக்­கி­ர­மித்து நர­வேட்­டை­யா­டிய ஒரு நாட்டின் உத­வியை இலங்கை கோரி­யி­ருப்­பது சிறு­பான்மை முஸ்­லிம்­களை இலக்கு வைப்­ப­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு பதி­லாக அதனை திட்­டம்­போட்டு வளர்ப்­பதில் இஸ்­ரே­லுக்கு பெரும் பங்­குண்டு. அத்­த­கைய கைங்­க­ரி­யத்தை செய்யும் நிபு­ணத்­து­வமும் திற­மையும் இஸ்­ரே­லுக்கு உண்டு என்­ப­தற்கு வர­லாறு சான்­றாகும். இஸ்ரேல் மற்றும் அமெ­ரிக்­காவில் உள்ள நூற்­றுக்­க­ணக்­கான ஆயுத உற்­பத்தி தொழிற்­சா­லைகள் தொட­ராக இயங்­கு­வ­தற்கு இஸ்ரேல் பாடு­ப­டு­கி­றது என்­பது பகி­ரங்க ரக­சி­ய­மாகும்.

இஸ்ரேல் பயங்­க­ர­வாத எதிர்ப்புத் திட்­டத்­திற்­காக இங்கு வருகை தரு­வதை “இலங்கை முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக்கும் இஸ்­ரே­லிய திட்டம்” என்று குறிப்­பி­டு­வதில் தவ­றில்லை. இலங்­கைக்கு எஞ்­சி­யி­ருக்கும் வெளி­நாட்டு வளங்­களின் கடைசித் துளி­யையும் கிள்ளி எடுக்க இவர்­களின் வருகை போது­மா­னது. பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்த வாக­னங்கள் உட்­பட எனைய வளங்­க­ளையும் பரி­சாக வழங்­கு­வ­தற்கு ஜப்பான் பரந்த விளம்­ப­ரத்தை அளித்து வரு­கி­றது. உண்­மை­யான வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் மற்றும் சுற்­றுலாப் பய­ணி­களை இலங்­கைக்கு வர­வி­டாமல் பய­மு­றுத்­து­வ­தற்கு இந்த இரு நாடு­களும் போது­மான திறன் கொண்­டவை.

இந்த அறி­விப்பு (சண்டே டைம்ஸ் 06.02.2022) நமது உயிர் வாழ்­வுக்கு இன்­றி­ய­மை­யாத அந்நிய முத­லீட்டை திசை திருப்பி விடும் என்­பதில் கடு­க­ளவும் சந்­தே­க­மில்லை. காரணம் குறித்த இந்த நாடு பயங்­க­ர­வா­தத்தை அதன் மண்­ணி­லி­ருந்து ஒரு­போதும் முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­வில்லை என்­பதே உல­க­றிந்த செய்­தி­யாகும். இஸ்ரேல் அமெ­ரிக்­காவின் கட்­டுப்­பாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் – தீவி­ர­வாத ஆயுதக் குழு­வையும் அதன் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களையும் நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­காக இங்கு அழைத்­து­வ­ரலாம். உலகில் பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டித்த ஒரு சில நாடு­களில் இலங்­கையும் ஒன்று. ஆனால் 30 வருட கால யுத்­தத்தின் போது எமக்கு ஆயு­தங்­களை விற்­றதன் மூலம் (அன்­ப­ளிப்­பாகஅல்ல) பய­ன­டைந்த நாடு­களில் இஸ்­ரேலும் ஒன்று. அதனால் இஸ்ரேல் வளம் பெற்­றது. நாம் அத்­தி­யா­வ­சியத் தேவை­க­ளுக்­காக வரி­சையில் நிற்­கின்றோம். இர­சா­யன உரங்­க­ளுக்­கான தடைச் சட்டம் நாட்டின் விவ­சா­யத்தை நாச­மாக்­கி­யது. அது ஒரு முட்­டாள்­த­ன­மான முடிவு என்­பது இன்று நிதர்­ச­ன­மா­கி­யுள்­ளது. பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு அரசு எடுக்கும் இத்­த­கைய தீர்­மானம் முட்­டாள்­த­ன­மாக பய­ணத்தை தொட­ர­வுள்ளோம் என்­ப­தையே எதிர்வு கூறு­கி­றது.

எவ்­வா­றா­யினும், இங்கு இடம்­பெறும் சில மனித உரிமை மீறல்கள் மேற்­கத்­திய ஆயுதத் தொழிற்­சா­லை­களின் நலன்­க­ளுக்­காக தொழிற்­படும் வெளி­நாட்டு முக­வர்­க­ளினால் திட்­ட­மிட்டு தூண்­டப்­ப­டு­கி­றது என பலர் நம்­பு­கின்­றனர். இன்னும் சில உரிமை மீறல்கள் வேறு­சில வழி­க­ளிலும் உரு­வா­கின்­றன. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான மற்றும் இஸ்லாம் பற்­றிய பீதியும் வெறுப்பு சொல்­லா­டல்­களும் வெளி­நாட்டு அரசு சாரா செயற்­பாட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்தும் அண்டை நாடு­க­ளி­லி­ருந்தும் தோன்­றி­ய­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இது குறித்தும் எமது கவனக் குவிப்பு அவ­சி­ய­மாகும். வட கிழக்கில் தனி­நாடு அமைக்கும் தாகத்­தோடு நடை­பெற்ற மூன்று தசாப்த கால தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் போருக்கு இலங்கை முஸ்­லிம்­களின் ஆத­ரவு இல்­லாமை உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக ஈஸ்டர் தாக்­கு­தல்­களை வெளி­நாட்டு மத விரோத சுரண்டல் சக்­திகள் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தாக இலங்கை முஸ்­லிம்­களும் நம்­பு­கின்­றனர்.



மூன்று தசாப்த கால போரில் அர­சுக்கு ஆத­ர­வாக இருந்த சிறு­பான்மை முஸ்­லிம்­களை பழி­வாங்­க­லாமா?

இந்தப் பின்­ன­ணி­யில்தான் வெளி­வி­வ­கார அமைச்சின் கண்­து­டைப்­புக்­கான முயற்­சியை நோக்­க­வேண்­டி­யுள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை ரத்து செய்­வ­தற்குப் பதி­லாக அல்­லது குறைந்­த­பட்சம் அர­சி­ய­ல­மைப்பில் உள்ள அடிப்­படை உரி­மைகள் விதி­க­ளுக்கு இணங்க அதனை கொண்டு வரு­வ­தற்குப் பதி­லாக வெறும் கவர்ச்­சிக்­காக மட்டும் படம் காட்டும் வெளி­யு­றவு அமைச்சின் ஏமாற்று முயற்­சியை நாம் பார்க்க வேண்டும். அனைத்து துறை­க­ளிலும் இலங்­கையின் சொந்தக் குடி­மக்­க­ளுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்­தப்­படும் அடக்குமுறைச் சட்டங்களைப் புதுப்பிக்குமாறு சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது கவலை தருகின்றது.

அளுத்­கம, திகன, மினு­வாங்­கொட போன்ற பகு­தி­களில் உள்ள பெரும்­பான்­மை­யினர் சட்­டத்தை மீறிய போது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை பிர­யோ­கிக்க விரும்­பாத அதே­நேரம், மாவ­னல்லை புத்தர் சிலை சம்­ப­வங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும் கடு­மை­யான பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை பிர­யோ­கித்­த­மை­யிலும் பிரச்­சினை உள்­ளது. முப்­பது வருட கால யுத்­தத்தில் முஸ்­லிம்கள் நாட்டின் பெரும்­பான்மை பக்கம் நின்­ற­தற்­காக குற்றம் சுமத்தி சிறு­பான்மை முஸ்­லிம்­களை பழி­வாங்­கு­வது போல் அர­சி­யல்­வா­தி­களும் ஊடகத் துறை­யி­னரும் ஈஸ்டர் தாக்­கு­தலை நியா­ய­மான தேவை­க­ளுக்கு அப்பால் தொடர்ந்தும் உயிர்­வாழ வைக்­கின்­றனர். ஏப்ரல் 21 தாக்­குதல் நடந்த அந்த நொடி­யி­லேயே உண்­மை­யான பயங்­க­ர­வா­திகள் அனை­வரும் முழு­மை­யாக அழிந்து நாச­மா­கிய போதிலும், அர­சாங்­கத்தின் “வெளிப்­ப­டை­யான இய­லாமை மற்றும் விருப்­ப­மின்மை” கொள்­கையை பயன்­ப­டுத்தி உண்­மை­யான தேசப்­பற்­றுள்ள குடி­மக்­க­ளுக்கு கண்­ணியம் வழங்­கு­வ­தாக கற்­பிதம் செய்து செய்து கொண்டு பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்­கிறோம் என்ற போலிக்­கா­ர­ணத்தின் கீழ் 2000 க்கும் அதி­க­மானோர் கைது செய்­யப்­பட்­டனர். இந்தப் போக்கு இன்னும் பல ஆண்­டு­க­ளுக்கு நாட்டை குட்­டிச்­சு­வ­ராக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. சுருக்­க­மாகச் சொன்னால், இலங்கைத் தாய்­நாட்டின் உண்­மை­யான தேச­பக்­தர்­களின் அவ­ல­நி­லையே இது­வாகும்.



நாடெங்கும் வெறுப்­பு­ணர்வைத் தூண்­டி­ய­தாக கிரி­மினல் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்கள் நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வி­னாலும், ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வி­னாலும் தண்­டிக்­கப்­ப­டாமல் விடப்­பட்­டுள்­ளனர். ஆனாலும் ஏப்ரல் 21 தாக்­குதல் நிகழ்ந்த அந்த கடி­ன­மான சூழ்­நி­லையில் கிறிஸ்­தவ திருச்­ச­பையும் தலை­சி­றந்த பௌத்த மத­கு­ருக்­களும் வழங்­கிய அமைதியான அன்பான தலைமைத்துவ பணியை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மறக்காது. எமது தாய் திருநாட்டை படுகுழியில் தள்ளுவதை விட பயங்கரவாத தடைச் சட்டத்தை புதைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.- Vidivelli

0 Comments: